Shanmugan Murugavel / 2016 ஜூன் 05 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
குத்துச்சண்டை ஜாம்பவனான முஹம்மட் அலி, இயற்கைக் காரணங்களால் ஏற்பட்ட நச்சூட்டு அதிர்ச்சியாலேயே இறந்தார் என, அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சுவாரப் பிரச்சினை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அலி, அமெரிக்க நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு, அரிஸோனாவில் இறந்தார். அவருக்குக் காணப்பட்ட பர்கின்ஸன்ஸ் நோய், அவரது சுவாசம் சம்பந்தமான பிரச்சினையை, நெருக்குதலுக்குள்ளாக்கியிருந்தது.
இந்நிலையில், அவரது மரணம் தொடர்பாகப் புதிய தகவலை வெளிப்படுத்தியுள்ள குடும்பத்தினர், கடந்த திங்கட்கிழமையே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அனுமதிக்கப்படும் போது, ஓரளவு சிறப்பான உடல்நிலையில் அவர் இருந்ததாகவும் தெரிவித்தனர். ஆனால், காலஞ்செல்லச் செல்ல, அவரது உடல்நிலை மோசமானதாகவும், இறுதியில் வெள்ளிக்கிழமை இரவு 9.10க்கு மரணமடைந்தார் எனவும் தெரிவித்தனர்.
முஹம்மட் அலியின் பொதுமக்களுக்கான மரண வீடு, எதிர்வரும் வெள்ளிக்கிழமை, அவரது சொந்த ஊரான லூயிஸ்வில்லேயில் இடம்பெறும். உலகின் பிரஜையாக அவர் இருந்தார் எனக் குறிப்பிட்ட அவரது குடும்பத்தின் பேச்சாளர் பொப் கண்ணெல், தனது மரண வீட்டில், எல்லா வகையான மக்களும் கலந்துகொள்வதை அவர் விரும்புவார் எனத் தெரிவித்தார்.
அவருக்கு ஏற்பட்ட சுவாசப் பிரச்சினை என்னவென இதுவரை வெளிப்படுத்தப்படாத போதிலும், நுரையீரலழற்சியே காரணமாக இருக்கலாமெனக் கருதப்படுகிறது. ஏனைய வகையான தொற்றுப் போலவே, நுரையீரலழற்சியும், நச்சூட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடுமென்பது குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago