Editorial / 2017 நவம்பர் 13 , பி.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பெய்னின் வலென்சியாவில் நேற்று இடம்பெற்ற பந்யத்தில் மூன்றாமிடம் பெற்ற ஹொண்டா அணியின் ஸ்பானிய ஓட்டுநரான மார்க் மார்க்கஸ், கடந்த ஐந்தான்டுகளில் தனது நான்காவது மோட்டோ கிரான்ட் பிறிக்ஸ் பட்டத்தை வென்றுள்ளார். அந்தவகையில், 24 வயதான மார்க் மார்க்கஸ், நான்கு மோட்டோ கிரான்ட் பிறிக்ஸ் பட்டங்களை வென்ற இளம் ஓட்டுநராகியுள்ளார்.
இப்பந்தயத்தில், முதல் 11 இடங்களுக்குள் மார்க் மார்க்கஸ் வந்தாலே, டுக்காட்டி அணியின் இத்தாலிய ஓட்டுநரான அன்ட்றியா டொவிஸியோவைத் தாண்டி மோட்டோ கிரான்ட் பிறிக்ஸ் பட்டத்தைக் கைப்பற்றுவார் என்ற நிலையிலேயே மூன்றாமிடத்தை மார்க் மார்க்கஸ் பெற்றிருந்தார். சக டுக்காட்டி அணியின் ஸ்பெய்ன் ஓட்டுநரான ஜோர்ஜ் லொரென்ஸோவால் முந்த விடாமல் தடுக்கப்பட்ட அன்ட்ரியா டொவிஸியோ விபத்தொன்றைச் சந்தித்து பந்தயத்திலிருந்து விலகியிருந்தார்.
இப்பந்தயத்தை ஹொண்டா அணியின் ஸ்பானிய ஓட்டுநரான டனி பெட்ரோசா வென்றதோடு, யமஹா அணியின் பிரான்ஸ் ஓட்டுநரான ஜொஹன் ஸர்க்கோ இரண்டாமிடத்தைப் பெற்றார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago