Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், இன்டர் மிலனின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், நாப்போலிக்குமிடையிலான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலன் வென்றது.
இன்டர் மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை றொமெலு லுக்காகி பெற்றிருந்தார்.
இந்நிலையில், ஜெனோவாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், ஏ.சி மிலனுக்குமிடையிலான போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. ஏ.சி மிலன் சார்பாக, டேவிட் கலப்ரியா, பியரி கலுலு ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, ஜெனோவா சார்பாகப் பெறப்பட்ட இர்ரண்டு கோல்களையும் மத்திய டெஸ்ரோ பெற்றிருந்தார்.
இதேவேளை, நடப்புச் சம்பியன்களான ஜுவென்டஸுன் மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், அத்லாண்டாவுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. ஜுவென்டஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை பெடெரிக்கோ சியெஸ்கா பெற்றதோடு, அத்லாண்டா சார்பாகப் பெறப்பட்ட கோலை றெமோ புரூலர் பெற்றிருந்தார்.
16 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago