Shanmugan Murugavel / 2025 மார்ச் 11 , பி.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கெதிரான இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான நியூசிலாந்துக் குழாமில் டெவோன் கொன்வே, லொக்கி பெர்கியூசன், கிளென் பிலிப்ஸ், றஷின் றவீந்திர, மிற்செல் சான்ட்னெர் ஆகியோர் இடம்பெறவில்லை.இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) பங்கேற்பதன் காரணமாகவே இவர்கள் குழாமில் இடம்பெறவில்லை.
இதேவேளை நியூசிலாந்து இறுதியாகப் பங்கேற்ற இலங்கைக்கெதிரான தொடரில் வேறு இருபதுக்கு - 20 தொடர்களில் பங்கேற்றதன் காரணமாக அத்தொடரில் பங்கேற்காத டிம் செய்ஃபேர்ட், பின் அலென், ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் குழாமுக்குத் திரும்பியுள்ளதோடு, இஷ் சோதியும் குழாமுக்குத் திரும்பியுள்ளார்.
இக்குழாமுக்கு மிஷெல் பிறேஸ்வெல் தலைமை தாங்கவுள்ளார்.
குழாம்: மிஷெல் பிறேஸ்வெல் (அணித்தலைவர்), பின் அலென், மார்க் சப்மன், ஜேக்கப் டஃபி, ஸக் போக்ஸ் (4 & 5ஆவது போட்டிகளுக்கு), மிற்ச் ஹே, மற் ஹென்றி (4&5ஆவது போட்டிகளுக்கு), கைல் ஜேமிஸன் (1,2,3ஆவது போட்டிகளுக்கு), டரைல் மிற்செல், ஜிம்மி நீஷம், வில் ஓ ருர்க் (1,2,3ஆவது போட்டிகளுக்கு), டிம் றொபின்ஸன், டிம் செய்ஃபேர்ட், இஷ் சோதி.
28 minute ago
30 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
30 minute ago
1 hours ago