Editorial / 2018 நவம்பர் 01 , மு.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ஐக்கிய அரபுத் தலைநகர் அபுதாபியில் நேற்றிரவு இடம்பெற்ற முதலாவது போட்டியில் பாகிஸ்தான் வென்றது.
இப்போட்டியில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், மொஹமட் ஹபீஸ் 45 (36), சப்ராஸ் அஹமட் 34 (26), ஆசிப் அலி 24 (21), இமாட் வசீம் ஆட்டமிழக்காமல் 14 (05) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அடம் மில்ன் 2, இஷ் சோதி, அறிமுக வீரர் அஜாஸ் பட்டேல், கொலின் டி கிரான்ட்ஹொம் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 149 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்று இரண்டு ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், கொலின் மன்றோ 58 (42), றொஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 42 (26) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஹசன் அலி 3, ஷடாப் கான், இமாட் வசீம் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக மொஹமட் ஹபீஸ் தெரிவானார்.
45 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago