Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 18 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடப்புப் பருவகாலத்தைத் தாண்டி பிரேஸிலியக் கால்பந்தாட்டக் கழகமான சன்டோஸில் முன்களவீரரான நெய்மர் தொடர விரும்புவதாக அவரது தந்தையும் முகவருமான நெய்மர் டா சில்வா சன்டோஸ் சீனியர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 31ஆம் திகதி சன்டோஸில் இணைந்த 33 வயதான நெய்மர், எதிர்வரும் ஜூன் மாதம் வரையில் ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட்டுள்ளார்.
இதுவரையில் சன்டோஸுக்காக ஒரு முழுப் போட்டியையும் ஆடியிருக்காத நெய்மர், எதிர்காலத்தை விட நிகழ்காலம் குறித்து சிந்திப்பதாகக் கூறியுள்ளார்.
இதேவேளை 2026ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடர் வரையாவது கழகத்தில் நெய்மர் இருப்பாரென நம்புவதாக சன்டோஸின் தலைவர் மார்செலோ டெய்ஸ்கெய்ரா தெரிவித்துள்ளார்.
20 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
2 hours ago