Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், முதல் மூன்று போட்டிகளில் பங்கேற்கும் இந்தியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட குழாமாகவே இது அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இக்குழாமில், இரவிச்சந்திரன் அஷ்வின், இரவீந்திர ஜடேஜா, மொஹமட் ஷமி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதோடு, காயம் காரணமாக, ஷீகர் தவான், லோகேஷ் ராகுல், புவனேஷ்வர் குமார் ஆகியோர் குழாமில் இடம்பெறவில்லை.
இதேவேளை, சுரேஷ் ரெய்னா, குழாமுக்கு மீளத் திரும்பியுள்ளதோடு, வேகப்பந்து வீச்சாளர்களாக, உமேஷ் யாதவ், தவால் குல்கர்னி, ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்டிக் பாண்ட்யா ஆகியோர் குழாமில் இடம்பெற்றுள்ளதோடு, சுழற்பந்து வீச்சாளர்களாக, அமித் மிஷ்ரா, ஜயந்த் யாதவ், அக்ஷார் பட்டேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இது தவிர, கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற சிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கான குழாமில் இடம்பெற்ற, மந்தீப் சிங், கேதார் யாதவ், மனீஷ் பாண்டே ஆகியோர் குழாமில் இடம்பெற்றுள்ளதோடு, யுஸ்வேந்திர சஹால், ரிஷி தவான், பைஸ் பஸல், கருண் நாயர், அம்பாதி ராயுடு, பரிந்தர் ஸ்ரான் ஆகியோர் குழாமில் இடம்பெறவில்லை.
குழாம்: மகேந்திர சிங் டோணி (தலைவர்), ரோஹித் ஷர்மா, அஜிங்கியா ரகானே, விராத் கோலி, மனீஷ் பாண்டே, சுரேஷ் ரெய்னா, ஹர்டிக் பாண்ட்யா, அக்ஷார் பட்டேல், ஜயந்த் யாதவ், அமித் மிஷ்ரா, ஜஸ்பிரிட் பும்ரா, தவால் குல்கர்னி, உமேஷ் யாதவ், மந்தீப் சிங், கேதார் யாதவ்
3 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026