2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

நியூசிலாந்துக் குழாம் அறிவிப்பு

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 26 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான, மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 14 பேர் கொண்ட குழாமாகவே இது அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இக்குழாமில், அதிரடித் துடுப்பாட்ட வீரர் டொம் ப்றூஸ், சகலதுறை வீரர் பென் வீலர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இவர்கள் தவிர, சகலதுறை வீரர் கொரே அன்டர்சன், தனித்து துடுப்பாட்ட வீரராக குழாமில் இடம்பெற்றுள்ளார்.

நியூசிலாந்துக் குழாமில் முதற்தடவையாக இடம்பிடித்துள்ள டொம் ப்றூஸ், நியூசிலாந்தின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரில், 76 என்ற சராசரியில் 174 ஸ்ரைக்ரேட்டில் ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இடதுகை வேகப்பந்து வீச்சாளரான பென் வீலர், கடந்தாண்டு ஜூன் மாதம் தொடக்கம் ஓகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதிகளில் ஆறு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரில், ஐந்து போட்டிகளில் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இதேவேளை, தனது இடது கண்ணில் சத்திர சிகிச்சையை மேற்கொண்ட  சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் றொஸ் டெய்லர் இக்குழாமில் இடம்பிடிக்காதபோதும், உள்ளூர் இருபதுக்கு-20 தொடருக்கு, எதிர்வரும் நாட்களில் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் ஜனவரி மூன்றாம் திகதி நேப்பியரில் ஆரம்பமாகும் முதலாவது போட்டியுடன், மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடர் ஆரம்பிக்கிறது.

நியூசிலாந்துக் குழாம்: கேன் வில்லியம்சன் (அணித்தலைவர்), கொரே அன்டர்சன், ட்ரெண்ட் போல்ட், டொம் ப்ரூஸ், கொலின் டி கிரான்ட்ஹொம், மார்ட்டின் கப்தில், லொக்கி பெர்கியூசன், மற் ஹென்றி, கொலின் மன்றோ, ஜேம்ஸ் நீஷம், லுக் றொங்கி (விக்கெட் காப்பாளர்), மிற்சல் சான்ட்னெர், இஷ் சோதி, பென் வீலர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .