Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், நாளை ஆரம்பிக்கிறது. ஹோபார்டில் இடம்பெறும் முதலாவது போட்டியுடனே இத்தொடர் ஆரம்பிக்கவுள்ளது.
நாளைய போட்டி, இலங்கை நேரப்படி காலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இரு அணிகளும் ஓரளவு இளமையான அணிகளாகக் காணப்படுகின்ற போதிலும், இரு அணிகளுக்குமிடையிலான வித்தியாசம், மிக அதிகமானதாக இருப்பதாகக் கருதப்படுகிறது.
மேற்கிந்தியத் தீவுகளை விடப் பலமான அணியான நியூசிலாந்து அணியை, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் தோற்கடித்த தன்னம்பிக்கையுடன், அவுஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.
மறுபுறத்தில், பயிற்சிப் போட்டியில், அனுபவமற்ற, சிறிய அணியொன்றுடன் 10 விக்கெட்டுகளால் தோல்வியடைந்த நிலையில், கடுமையான அழுத்தத்துடன் மேற்கிந்தியத் தீவுகள் களமிறங்குகிறது.
இப்போட்டியில் பங்குபற்றும் அவுஸ்திரேலிய அணி: ஜோ பேர்ண்ஸ், டேவிட் வோணர், ஸ்டீவன் ஸ்மித், அடம் வோஜஸ், ஷோன் மார்ஷ், மிற்சல் மார்ஷ், பீற்றர் நெவில், ஜேம்ஸ் பற்றின்சன், பீற்றர் சிடில், ஜொஷ் ஹேஸல்வூட், நேதன் லையன்
எதிர்பார்க்கப்படும் மே.தீவுகள் அணி: கிறெய்க் பிறெத்வெய்ட், ஷாய் ஹோப், டெரன் பிராவோ, மார்லன் சாமுவேல்ஸ், ஜேர்மைன் பிளக்வூட், டினேஷ் ராம்டின், ஜேஸன் ஹோல்டர், கார்லொஸ் பிறெத்வெய்ட், ஜெரோம் டெய்லர், தேவேந்திர பிஷூ.
34 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago