Shanmugan Murugavel / 2015 நவம்பர் 04 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கு 72 நாட்கள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள தென்னாபிரிக்க அணி, இருபது-20 சர்வதேச போட்டித் தொடரையும் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரையும் கைப்பற்றியுள்ள நிலையில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பிக்கின்றது.
முதலாவது டெஸ்ட் போட்டி நாளை, இலங்கை நேரப்படி காலை 9.30 மணிக்கு மொகாலியில் ஆரம்பிக்கின்றது. முன்னொருகாலமும் இல்லாதது போன்று, ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியை விட பலமாக விளங்கும் இந்திய அணி, 2006ஆம் ஆண்டுக்கு பின் அந்திய மண்ணில் டெஸ்ட் தொடரொன்றில் தோற்றிக்காத தென்னாபிரிக்க அணியிடம் பலத்த சவாலை எதிர்நோக்கவுள்ளது.
இந்திய அணியின் டெஸ்ட் தலைவராக பொறுப்பேற்ற பின் விராத் கோலி, சொந்த மண்ணில் விளையாடப்போகும் முதலாவது டெஸ்ட் தொடர் என்பதோடு, மறுமுனையில் தென்னாபிரிக்க டெஸ்ட் அணியின் தலைவராக பொறுப்பேற்ற பின் ஹஷிம் அம்லா சந்திக்கும் கடின சோதனையாக இந்தத் தொடர் அமையவுள்ளது.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பின் இந்தியாவில் டெஸ்ட் போட்டி இடம்பெறவுள்ள நிலையில், இடைப்பட்ட இந்தக் காலத்தில் இடம்பெற்ற போட்டிகளில் பிரகாசித்த அஜிங்கயா ரகானே, இந்தியாவின் இறுதி டெஸ்ட் போட்டியில் அணிக்கு திரும்பிய சட்டேஸ்வர் புஜாராவின் பெறுபேறுகள் கவனிக்கப்படுவனையாக இருக்கும். மறுமுனையில், தென்னாபிரிக்க அணி சார்பாக மூத்த வீரர்கள் ஏபி டீவில்லியர்ஸ், பவ் டுபிலிசிஸ் நம்பிக்கையளித்தாலும், ஹஷிம் அம்லாவின் போர்மும் ஜெபி டுமினியின் உடற்றகுதியும் கேள்விக்குரியதொன்றாக காணப்படுகிறது.
பந்துவீச்சை பொறுத்த வரையில் காயத்திலிருந்து மீண்ட இரவிச்சந்திரன் அஷ்வின், இந்திய அணிக்கு பலத்தை வழங்குவதுடன், உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்ட ரவீந்திர ஜடேஜாவும் அணிக்கு மேலும் பலம் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இஷாந்த் ஷர்மாவுக்கு ஒரு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் வருண் ஆரோனும் உமேஷ் யாதவும் முதலாவது போட்டியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுமுனையில் தென்னாபிரிக்க அணி சார்பாக, அவ்வணியின் முதல் மூன்று வேகப்பந்துவீச்சாளர்களான டேல் ஸ்டெயின், மோர்னே மோர்க்கல், வெர்னோன் பிளந்தர் ஆகியோர் பங்குபற்றுவது உறுதியாகியுள்ள நிலையில், சுழற்பந்துவீச்சாளராக சைமன் ஹாமர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் இந்திய அணி – முரளி விஜய், ஷீகர் தவான், அஜிங்கயா ரகானே, விராத் கோலி, ரோஹித் ஷர்மா, ரித்திமான் சகா, ரவீந்திர ஜடேஜா, இரவிச்சந்திரன் அஷ்வின், அமித் மிஷ்ரா, வருண் ஆரோன், உமேஷ் யாதவ்
எதிர்பார்க்கப்படும் தென்னாபிரிக்க அணி- டீன் எல்கர், ஸ்டியான் வான் சில், ஹஷிம் அம்லா, பவ் டுபிலிஸிஸ், ஏபி டீவில்லியர்ஸ், டெம்பா பவுமா, டனி விலாஸ், வெர்னோன் பிளந்தர், டேல் ஸ்டெயின், மோர்னே மோர்க்கல், சைமன் ஹாமர்
7 minute ago
33 minute ago
43 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
33 minute ago
43 minute ago
46 minute ago