Shanmugan Murugavel / 2016 ஜூன் 30 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸில் இடம்பெற்றுவரும் யூரோ 2016 கிண்ணப் போட்டிகளின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில், இலங்கை நேரப்படி, சனிக்கிழமை (02) அதிகாலை 12.30 மணிக்கு பெல்ஜியமும், வேல்ஸும் பலப்பரிட்சை நடாத்தவுள்ளன.
நட்சத்திரப்பட்டாளங்களைக் கொண்டு விளங்கி உலகத் தரவரிசையில் இரண்டாமிடம் வகிக்கும் பெல்ஜியமே பெரும்பாலும் இப்போட்டியை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இறுதியாக இரண்டு தடவை வேல்ஸை சந்தித்தபோது வேல்ஸின் கையே ஓங்கிக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பெல்ஜிய அணித்தலைவர் வின்சென்ட் கொம்பனி காயம் காரணமாக தொடரில் பங்கேற்காமை காரணமாக அணித்தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள ஈடின் ஹஸார்ட், கெவின் டீ புரூன் போன்ற நட்சத்திர வீரர்கள் சிறந்த ஃபோர்முடன் காலிறுதிக்கு வந்திருப்பது பெல்ஜியத்துக்கு அதிக நன்மைகளை வழங்குகின்றபோதும், தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் இடையில் வெளியேறியதுடன், செவ்வாய்க்கிழமை (28), புதன்கிழமை (29) பயிற்சிகளில் பங்கேற்றிருக்கவில்லை. இதன் காரணமாக வேல்ஸூடனான போட்டியில் ஹஸார்ட் பங்கேற்பாரா என்ற பலத்த சந்தேகம் காணப்படுகின்றது. தவிர, முன்கள வீரரான றொமேலு லூகாக்குவின் போர்மும் பெல்ஜியமுக்கு கவலை தருவதாக உள்ளது.
மறுபக்கம், இத்தொடரில், ‘பிறீ கிக்’கள் மூலம் மிரட்டும் நட்சத்திர வீரரான கரித் பேல், ஆரோன் றாம்சீ ஆகியோரை முன்களத்தில் கொண்டுள்ளமை காரணமாக, தமது இறுதி 58 வருட கால்பந்தாட்ட வரலாற்றில் முதற்தடவையாக பெரிய தொடரொன்றின் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள வேல்ஸ், உயர்வான நம்பிக்கையுடன் காணப்படுவதுடன் பின்களத்திலும், அணித்தலைவர் ஆஷ்லி வில்லியம்ஸ் தலைமையில் உறுதியான தடுப்பு வலயத்தை அமைத்து பெல்ஜியத்துக்கு பலத்த சவாலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
17 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago