Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 15 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷ் பிறிமியர் லீக்கின் ஆரம்பப் போட்டி நவம்பர் 24ஆம் திகதியிலிருந்து நவம்பர் 22ஆம் திகதிக்கு முன்னகர்த்தப்பட்டுள்ளது. தொடரின் இறுதிப்போட்டி டிசம்பர் 15ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
தொடரின் ஆரம்பப் போட்டியும், இறுதிப்போட்டியும், இறுதிக்கட்ட போட்டியொன்றும் டாக்காவில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை ஒக்டோபர் 31ஆம் திகதி இடம்பெறவிருந்த வீரர் தெரிவு, தற்போது ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னகர்த்தப்பட்டுள்ளது. வீரர்கள் தெரிவுப் பட்டியலில் 196 வெளிநாட்டு வீரர்களும், 122 உள்நாட்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு அணியும் மொத்தமாக 12 வெளிநாட்டு வீரர்களை பதிவு செய்ய முடியுமென்றும், போட்டியொன்றில் அவர்களிலிருந்து அதிகமாக நான்கு வீரர்களையே பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான், இங்கிலாந்து சார்பாகவே அதிகபட்சமாக 53 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதில் பாகிஸ்தானிலிருந்து வேகப்பந்து வீச்சாளர்கள் மொகமட் அமிரும், மொகமட் ஆசிஃப்பும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் பங்குபற்றுவதற்கான அனுமதியை சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வழங்கியுள்ளதாக பங்களாதேஷ் பிறிமியர் லீக்கின் செயலாளர்இஸ்மாயில் ஹைதர் மலிக் கூறியுள்ளார்.
இவ்வாண்டுக்கான பங்களாதேஷ் பிறிமியர் லீக்கின் தொடர் அட்டவணை, 2013இனை போன்றதாகவே அமையும் என்றும், நான்கு இறுதிகட்ட போட்டிகளினூடாகவே இறுதிப்போட்டிக்கான அணிகள் தெரிவு செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. போட்டிகள் உள்ளூர் நேரப்படி மாலை 2 மணிக்கும், 6.45க்கும் ஆரம்பமாகும் என்றும் பெரும்பாலான போட்டிகள் டாக்காவிலேயே இடம்பெறும் என்றும், சிட்டகொங்கில் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு போட்டிகள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
47 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
4 hours ago
5 hours ago