Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 29 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்செஸ்டர் யுனைட்டட் அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து விலகப் போவதில்லையென, லூயிஸ் வான் கால் அறிவித்துள்ளார். செல்சி அணிக்கெதிரான சமநிலை முடிவுக்குப் பின்னரே அவர், இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, இப்பதவியிலிருந்து விலகவுள்ளார் போன்ற கருத்தை, லூயிஸ் வான் கால் வெளியிட்டிருந்தார். அதுகுறித்து, கழக முகாமைத்துவத்துடன் உரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், செல்சி அணியுடனான போட்டியின் பின்னர் கருத்துத் தெரிவித்த அவர், 'இவ்வளவு அதிகமான அழுத்தத்துக்கு நடுவில், வீரர்களால் இவ்வாறானதொரு திறமை வெளிப்பாட்டை வழங்கும் போது, பதவி விலகுவதற்குக் காரணமேதும் இல்லை" எனத் தெரிவித்தார்.
யுனைட்டட் அணியிலுள்ள பிரச்சினையாக, அதன் சூழலே இருப்பதாகத் தெரிவித்த வான் கால், அதில், ஊடகங்களும் ஓர் அங்கமெனத் தெரிவித்தார். அத்தோடு, தன் மீதும் ஏனைய ஊழியர்கள் மீதும், கழக நிர்வாகத்துக்கு முழுமையான நம்பிக்கை உண்டு எனவும், அவர் குறிப்பிட்டார்.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago