Editorial / 2018 ஜனவரி 10 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில், தென்னாபிரிக்காவின் இளம் வேகப்பந்துவீச்சாளர் கஜிஸ்கோ றபடா முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவுக்கெதிரான முதலாவது இனிங்ஸில் 3, இரண்டாவது இனிங்ஸில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே முதலிடத்துக்கு கஜிஸ்கோ றபடா முன்னேறியுள்ளார்.
இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கெதிரான இறுதி ஆஷஸ் டெஸ்டில் ஒரு விக்கெட்டை மாத்திரம் கைப்பற்றியதைத் தொடர்ந்தே, முதலாமிடத்திலிருந்த ஜேம்ஸ் அன்டர்சன் இரண்டாமிடத்துக்கு கீழிறங்கியுள்ளார்.
இதேவேளை, இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய தென்னாபிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் வேர்ணன் பிலாந்தர், 12ஆவது இடத்திலிருந்து ஆறாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில், அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தில் தொடருகின்ற நிலையில், இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ றூட் இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
17 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago