Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சகலதுறை வீரர் மார்லன் சாமுவேல்ஸூக்கு, பந்துவீசுவதற்கு 12 மாதங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பந்தை வீசியெறிவதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்தே, இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கெதிராக காலியில் இடம்பெற்ற முதலாவது தொடரில், அவர் மீது இக்குற்றச்சாட்டு மேற்கொள்ளப்பட்ட நிலையில், தனது பந்துவீச்சை அவர் சோதித்திருந்தார்.
இதன்போது, அனுமதிக்கப்பட்ட 15 பாகையை விட அதிகமானளவு அவரது முழங்கை விரிவு காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களுள், அவர் பந்தை வீசியெறிவது இரண்டாவது தடவையாக நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட் சபையின் விதிமுறையின்படி, 12 மாதங்களுக்குப் பந்துவீசுவதற்கு அவருக்குத் தடை விகிக்கப்பட்டுள்ளது.
அக்காலத்தின் பின்னரே, அவரது பந்துவீச்சுத் தொடர்பான அடுத்த சோதனை மேற்கொள்ளப்படும்.
ஏற்கெனவே, இலங்கைக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் பந்தை வீசியெறிவதாகக் குற்றஞ்சாட்ட மேற்கிந்தியத் தீவுகளின் சுனில் நரைன், பந்துவீசுவதற்குத் தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago