2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

பானுக ராஜபக்ஷ எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

J.A. George   / 2022 ஜனவரி 13 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்டவீரரான பானுக்க ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து  ஓய்வு பெறும் தீர்மானத்தை மீளப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் இலங்கை கிரிக்கெட் சபைக்கு வழங்கிய இராஜினாமா கடிதத்தை மீளப் பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் முகாமையாளர் மொஹான் டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான T20I போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகிய 30 வயதான பானுக்க ராஜபக்ஷ இலங்கை அணிக்காக 5 ஒருநாள் மற்றும் 18 T20I போட்டிகளில் விளையாடியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .