Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2021 பெப்ரவரி 19 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளரானா டேவிட் சேகர் தமது பதவியினை இராஜினமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டேவிட் சேகர், 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 08 ஆம் திகதி முதல் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கான பயிற்றுவிப்பாளராக செயற்பட்டார்.
இந்த நிலையிலே, இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அணி மூன்று இருபதுக்கு 20 போட்டி, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.
முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
58 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago