2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பயேர்ண் மியூனிச்சிலிருந்து விலகும் அலபா

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 16 , பி.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜேர்மனிய புண்டெஸ்லீகா கழகமான பயேர்ண் மியூனிச்சிலிருந்து பருவகால முடிவில் விலகுவதாக அக்கழகத்தின் பின்களவீரர் டேவிட் அலபா உறுதிப்படுத்தியுள்ளார்.

புதிய ஒப்பந்தமொன்றுக்கு இணங்கத் தவறியநிலையிலேயே பயேர்ணிலிருந்து 28 வயதான அலபா விலகுகின்றார்.

பயேர்ணில் 2008ஆம் ஆண்டு இணைந்த அலபா, பயேர்ணுக்காக 415 போட்டிகளில் விளையாடி 33 கோல்களைப் பெற்றிருந்தார். தவிர, ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக்கை இரண்டு தடவைகளும், ஒன்பது தடவைகள் புண்டெஸ்லீகா பட்டத்தையும் பயேர்ணில் அலபா வென்றிருந்தார்.

அலபாவைக் கைச்சாத்திட ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி உள்ளிட்டவை முயன்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மத்தியகளவீரரொருவராக தனது விளையாடும் காலத்தை ஆரம்பித்திருந்த அலபா, 2010ஆம் ஆண்டு இடது பின்களவீரராக மாற்றப்பட்டதுடன், அண்மையின் மத்திய பின்களவீரராக மாற்றப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .