Shanmugan Murugavel / 2016 நவம்பர் 08 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

அடுத்தாண்டு ஆரம்பத்தில், நியூசிலாந்து அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ள சப்பல் - ஹட்லி கிரிக்கெட் தொடரில், அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்புக் குழாமில், அவ்வணியின் முன்னாள் வீரர்களான றயன் ஹரிஸ், பிரட் ஹடின் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். பந்துவீச்சு ஆலோசகராக றயன் ஹரிஸும், களத்தடுப்பு ஆலோசகராக பிரட் ஹடினும் செயற்படவுள்ளனர்.
அவுஸ்திரேலிய அணியின் வழக்கமான பந்துவீச்சுப் பயிற்றுநர் டேவிட் சாகர், துடுப்பாட்டப் பயிற்றுநர் கிரேம் ஹிக் ஆகியோர், அத்தொடருக்குப் பின்னர் இடம்பெறவுள்ள இந்தியாவுக்கெதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காகத் தயார்படுத்த, இந்தியாவுக்குச் செல்லவுள்ள காரணத்தாலேயே, இவர்களிருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
5 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
13 Apr 2026