Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 11 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னமெரிக்க கால்பந்தாட்டச் சம்மேளன உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில், பராகுவேயில் புதன்கிழமை (11) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் பிரேஸில் தோல்வியடைந்தது.
பராகுவே சார்பாகப் பெறப்பட்ட கோலை டியகோ கோமிஸ் பெற்றிருந்தார்.
இதேவேளை தம்நாட்டில் நடைபெற்ற ஆர்ஜென்டீனாவுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் கொலம்பியா வென்றது. கொலம்பியா சார்பாக யெர்சன் மொஸ்குவேரா, ஜேம்ஸ் றொட்றிகாஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஆர்ஜென்டீனா சார்பாகப் பெறப்பட்ட கோலை நிக்கொலஸ் கொன்ஸலேஸ் பெற்றார்.
இந்நிலையில் வெனிசுவேலாவில் நடைபெற்ற அவ்வணிக்கும், உருகுவேயிக்கிடையிலான போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
இதேவேளை தம்நாட்டில் நடைபெற்ற பொலிவியாவுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் சிலி தோல்வியடைந்தது. பொலிவியா சார்பாக கர்மெலோ அல்கரனஸ், மிகேல் டெர்செரோஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, சிலி சார்பாகப் பெறப்பட்ட கோலை எடுவார்டோ வர்காஸ் பெற்றிருந்தார்.
இந்நிலையில் தம்நாட்டில் நடைபெற்ற பெருவுடனான போட்டியில் இன்னர் வலென்சியா பெற்ற கோலோடு 1-0 என்ற கோல் கணக்கில் ஈக்குவடோர் வென்றது.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago