Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸில் நடைபெற்று வரும் பரிஸ் 2024 ஒலிம்பிக்கின் தனது 100 மீற்றர் அரையிறுதிப் போட்டியிலிருந்து இரண்டு தடவைகள் சம்பியனான ஷெலி-அன் பிறேஸர்-பிறைஸ் சனிக்கிழமை (03) விலகியிருந்தார்.
அறிவிக்கப்படாத விதி மாற்றங்களால் அரங்கத்துக்குள் உள்நுழைய மறுக்கப்பட்டு பின்னர் தாமதமாக அனுமதிக்கப்பட்டு தயாராகும்போது காயமடைந்த நிலையிலேயே ஜமைக்காவின் பிறேஸர் பிறைஸ் விலகியிருந்தார்.
இந்நிலையில் இறுதியில் சென். லூசியாவின் ஜூலியன் அல்ஃபேர்ட் தங்கப் பதக்கத்தை வென்றதுடன், ஐக்கிய அமெரிக்காவின் ஷா கரி றிச்சர்ட்சன், மெலிஸா ஜெஃபெர்சன் ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தையும், வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.
இதேவேளை இலங்கையின் தருஷி கருணாரத்னவும் வெளியேற்றப்பட்டுள்ளார். தகுதிகாண் சுற்றுப் போட்டியில் 800 மீற்றரை இரண்டு நிமிடங்கள் ஏழு செக்கன்கள் 76 மில்லி செக்கன்களில் கடந்து அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறத் தவறிய கருணாரத்ன, இரண்டாவது சுற்று தகுதிகாண் போட்டியில் இரண்டு நிமிடங்கள் ஆறு செக்கன்கள் 66 மில்லி செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்த அரையிறுதிப் போட்ட்டிகளுக்குத் தகுதி பெறுவதற்கான நேரப் பெறுதியை மீண்டும் பெற்றிருக்காத நிலையிலேயே ஒலிம்பிக்கிலிருந்து விலகினார்.
13 minute ago
24 minute ago
32 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
32 minute ago
38 minute ago