2025 மே 19, திங்கட்கிழமை

பாகிஸ்தானுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் முன்னிலையில் இலங்கை

Editorial   / 2022 ஜூலை 24 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் முன்னிலையில் இலங்கை காணப்படுகின்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், காலியில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் திமுத் கருணாரத்ன, தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

இலங்கையணி சார்பாக டெஸ்ட் போட்டிகளில் டுனித் வெல்லலாகே அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஒஷாட பெர்ணாண்டோ, கருணாரட்ண ஆகியோர் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்ற நிலையில் 50 ஓட்டங்களுடன் மொஹமட் நவாஸிடம் பெர்ணாண்டோ வீழ்ந்திருந்தார். உடனேயே குசல் மென்டிஸும் ரண் அவுட்டாகியிருந்தார்.

இதைத் தொடர்ந்து யசீர் ஷாவிடம் 40 ஓட்டங்களுடன் கருணாரட்ணவும் விழ, அஞ்சலோ மத்தியூஸும், தினேஷ் சந்திமாலும் இனிங்ஸை நகர்த்தினர். பின்னர் 42 ஓட்டங்களுடன் நெளமன் அலியிடம் மத்தியூஸ் வீழ்ந்திருந்தார்.

அந்தவகையில், சந்திமால், தனஞ்சய டி சில்வா இனிங்ஸை நகர்த்திய நிலையில் இதைத் தொடர்ந்து நவாஸிடம் 80 ஓட்டங்களுடன் சந்திமால் வீழ்ந்திருந்தார். சிறிது நேரத்தில் தனஞ்சய டி சில்வாவும் 33 ஓட்டங்களுடன் நசீம் ஷாவிடம் வீழ்ந்திருந்தார்.

இந்நிலையில் இன்றைய முதலாம் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 315 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில், நிரோஷன் டிக்வெல்ல 42 ஓட்டங்களையும், டுனித் வெல்லலாகே ஆறு ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X