Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானுக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை, பின் தொடைத் தசைநார் உபாதை காரணமாக இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் கசுன் ராஜித தவறவிடுகின்றார்.
இரண்டு போட்டிகள் கொண்ட பாகிஸ்தானுக்கெதிரான டெஸ்ட் தொடரில், ராவல்பின்டியில் கடந்த புதன்கிழமை ஆரம்பித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு வந்த முதலாவது டெஸ்டின் ஐந்தாம் நாளில் ஆறு ஓவர்களை மாத்திரமே வீசியிருந்த கசுன் ராஜித, அப்போதே உபாதைக்குள்ளாகியுள்ளார்.
குறித்த டெஸ்டின் பாகிஸ்தானினின் முதலாவது இனிங்ஸின் பெரும்பகுதியில் களத்தில் கசுன் ராஜித காணப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில், கசுன் ராஜிதவுக்கான பிரதியீடொன்றும் வினவப்படாத நிலையில், லஹிரு குமார, விஷ்வ பெர்ணான்டோக்கு மேலதிகமாக, டெங்கால் இத்தொடரை தவறவிட்ட சுரங்க லக்மாலை பிரதியிட்ட அசித்த பெர்ணான்டோவே வேகப்பந்துவீச்சாளராக குழாமில் காணப்படுகிறார். இவர் டெஸ்ட் போட்டிகளில் இன்னும் அறிமுகத்தை மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, லசித் எம்புல்தெனிய, லக்ஷான் சந்தகான் என மேலதிகமாக இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களும் இலங்கைக் குழாமில் காணப்படுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago