Shanmugan Murugavel / 2021 ஜனவரி 31 , பி.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்காவுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான பாகிஸ்தான் குழாமில், சிரேஷ்ட சகலதுறைவீரர் மொஹமட் ஹஃபீஸ், சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் வஹாப் றியாஸ், ஆரம்பத்துடுப்பாட்டவீரர் பக்கர் ஸமன் ஆகியோர் இடம்பெறவில்லை.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில், இ-10 லீக் தொடரில் விளையாடி வரும் ஹபீஸ், எப்போது பாகிஸ்தான் குழாமுடன் இணைந்து கொள்வார் என்பது தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கும் அவருக்குமான முரண்பாட்டின் காரணமாகவே குழாமில் ஹபீஸ் இடம்பெறவில்லை.
இந்நிலையில், ஹபீஸ் தவிர றியாஸ், ஸமனுடன் காயங் காரணமாக ஷடாப் கானும், தனிப்பட்ட காரணங்களுக்கான இமாட் வசீமும் குழாமில் இடம்பெறவில்லை.
இதேவேளை, ஹஸன் அலி, ஆசிஃப் அலி, ஆமிர் யாமின் உள்ளிட்டோர் குழாமுக்குள் மீள அழைக்கப்பட்டுள்ளனர்.
குழாம்: பாபர் அஸாம் (அணித்தலைவர்), ஹரிஸ் றாஃப், மொஹமட் றிஸ்வான், ஆமிர் யாமின், ஹஸன் அலி, சஃப்ராஹ் அஹ்மட், அமட் பட், ஹுஸைன் தலாட், ஷகீன் ஷா அஃப்ரிடி, ஆசிஃப் அலி, இஃப்திஹார் அஹ்மட், உஸ்மான் குவாதிர், டனிஷ் அஸிஸ், குஷ்டில் ஷா, ஸஃபர் கொஹர், பாஹீம் அஷ்ரஃப், மொஹமட் ஹஸ்னைன், ஸஹிட் மஹ்மூட், ஹைதர் அலி, மொஹமட் நவாஸ்.
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago