Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 12 , பி.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானுக்கு, அடுத்தாண்டு சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்கு மேற்கிந்தியத் தீவுகள் இணங்கியமையைத் தொடர்ந்து, மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்காக, முழுமையான பலம் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியொன்று, அடுத்தாண்டு மார்ச்சில் பாகிஸ்தானின் லாகூருக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த தொடரானது இம்மாதம் விளையாடப்படவிருந்தபோதும் இத்தொடரை ஒழுங்கைமைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
லாகூரில், நேற்று திடீரென இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே, மூன்று போட்டிகள், அடுத்தாண்டு மார்ச் 29, 31 மற்றும் ஏப்ரல் முதலாம் திகதி இடம்பெறும் என மேற்கிந்தியத் தீவுகளின் சுற்றுப் பயணத்துக்கான அட்டவணையை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் நஜாம் சேதி உறுதிப்படுத்தியிருந்தார்.
உலகப் பதினொருவர் அணிக்கெதிரான தொடரின்போதும் இலங்கை அணிக்கெதிரான போட்டியின்போதும் பாகிஸ்தானிலிருந்த பாகிஸ்தானிலிருந்த பாதுகாப்பு நிலைமை போன்றிருக்க வேண்டும் எனத் தெரிவித்தே, இத்தொடருக்கான அனுமதியை மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையும் மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் சங்கமும் அளித்திருந்தன.
இதேவேளை, பொருத்தமாக நேரம் அமையுமிடத்து, அடுத்த ஐந்தாண்டுகளில், ஆண்டுதோறும் தொடராக இருபதுக்கு – 20 போட்டிகளை பாகிஸ்தானிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையும் இணங்கியுள்ளதாகவும் சேதி தெரிவித்திருந்தார்.
26 minute ago
48 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
48 minute ago
51 minute ago