2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

பார்சிலோனாவுக்குத் திரும்ப விரும்பும் மெஸ்ஸி

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 03 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவுக்கு எதிர்காலத்தில் தொழில்நுட்ப பணிப்பாளர் ஒருவராகத் திரும்ப விரும்புவதாக, பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரரான லியனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு ஓகஸ்ட் மாதத்திலேயே 20 ஆண்டுகளுக்குப் பின்னர் பார்சிலோனாவிலிருந்து 34 வயதான மெஸ்ஸி விலகியிருந்தார்.

இதேவேளை, பார்சிலோனாவோ அல்லது வேறு எங்காவதோ வாய்ப்பிருந்தால் தொழில்நுட்பப் பணிப்பாளராகப் பணியாற்றப் போவதாகக் கூறியுள்ளார்.

இதுதவிர, இலவசமாக விளையாட மறுத்த தகவலையும் மெஸ்ஸி மறுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .