Editorial / 2017 ஒக்டோபர் 10 , பி.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக்கிலிருந்து, ஸ்பானியக் கழகமான பார்சிலோனாவை வெளியேற்றுமாறு, பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்கள வீரரான நேமர், ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் கூட்டமைப்பை வலியுறுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
பார்சிலோனாவின் முன்னாள் வீரரான நேமருக்கும் பார்சிலோனாவுக்குமிடையிலான, ஏறத்தாழ 25.6 மில்லியன் யூரோ மேலதிக கொடுப்பனவு தொடர்பான பிரச்சினையிலேயே மேற்குறித்த கோரிக்கையை நேமர் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த மேலதிகக் கொடுப்பனவை வழங்க மறுக்கின்ற பார்சிலோனா, நேமர் கடந்தாண்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும்போது வழங்கப்பட்ட மேலதிக கொடுப்பனவையும் மீளக் கோருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago