2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பிறைட்டனிடம் தோற்ற டொட்டென்ஹாம்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்றது.

பிறைட்டன் சார்பாகப் பெறப்பட்ட கோலை லியனார்டோ ட்ரோஸார்ட் பெற்றிருந்தார்.

இதேவேளை, லெய்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், லீட்ஸ் யுனைட்டெட்டுக்குமிடையிலான போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் தோற்றிருந்தது. லெய்செஸ்டர் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹார்வி பார்ண்ஸ் பெற்றிருந்ததோடு, லீட்ஸ் சார்பாக, ஸ்டூவர்ட் டலாஸ், பற்றிக் பம்ஃபோர்ட், ஜக் ஹரிஸன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில் பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் 44 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றியுள்ளது. 41 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட்டும், 40 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நடப்புச் சம்பியன்கள் லிவர்பூலும், 39 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் லெய்செஸ்டருமுள்ளன. இதில், ஏனைய அணிகளை விட சிற்றி ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X