Editorial / 2024 ஏப்ரல் 19 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
! எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலத்தின் பழைய மாணவர்களின் மாபெரும் கிரிக்கெட் விழாவும் ஒன்றுகூடலும் நாளை 20ஆம் திகதி காலை ஆரம்பமாகவுள்ளது. நாளை முதல் திங்கட்கிழமை 22ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன.
பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எட்டியாந்தோட்டை வின்சன்ட் பெரேரா மைதானத்தில் இந்த கிரிக்கெட் விழா நடைபெறவுள்ளது.

அணிக்கு 11 பேரை கொண்டதாக நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிகளில் ஒவ்வொரு வருடங்களை சேர்ந்த க.பொ.த சாதாரண தர வகுப்பு அணிகள் கலந்துகொள்ளவுள்ளன.
35ற்கும் மேற்பட்ட அணிகள் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள நிலையில், நாளை காலை நடைப்பவணியைதொடர்ந்து முதற் சுற்று போட்டிகள் நடைபெற்று 21ஆம் திகதி அடுத்த கட்ட சுற்றுகளும் 22 ஆம் திகதி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் கலந்துகொள்ள பாடசாலையின் அனைத்து பழைய மாணவர்களுக்கும் பழைய மாணவர் சங்கத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
6 hours ago
8 hours ago
9 hours ago
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago
17 Apr 2026