Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 03 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

கட்டாரில் இவ்வாண்டு நடைபெறவுள்ள சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் உலகக் கிண்ணத் தொடரின் தென்னமெரிக்க கால்பந்தாட்டச் சம்மேளன தகுதிகாண் போட்டிகளில், பொலிவியாவில் நேற்றுக் காலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் சிலி வென்றிருந்தது.
சிலி சார்பாக, அலெக்ஸிஸ் சந்தேஸ் இரண்டு கோல்களையும், மார்செலினோ நுனுஸ் ஒரு கோலையும் பெற்றனர். பொலிவியா சார்பாக, மார்க் எனெளம்பா, மார்செலோ மார்டின்ஸ் மொரேனோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
உருகுவேயில் நடைபெற்ற அவ்வணி போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் வெனிசுவேலா வென்றிருந்தது. உருகுவே சார்பாக, றொட்றிகோ பென்டாக்கூர், ஜியோர்ஜியன் டி அரஸ்கடெயா, எடின்சன் கவானி, லூயிஸ் சுவாரஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். வெனிசுவேலா சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜொசெஃப் மார்டின்ஸ் பெற்றிருந்தார்.
ஆர்ஜென்டீனாவில் நடைபெற்ற போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அவ்வணி கொலம்பியாவை வென்றிருந்தது. ஆர்ஜென்டீனா சார்பாகப் பெறப்பட்ட கோலை லொட்டரோ மார்ட்டின்ஸ் பெற்றிருந்தார்.
பிரேஸிலில் நடைபெற்ற போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை அவ்வணி வென்றிருந்தது. பிரேஸிலில், றபின்ஹா, பிலிப் கோச்சினியோ, அந்தோனி, றொட்றிகோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
10 minute ago
21 minute ago
29 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
29 minute ago
35 minute ago