Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 21 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானின் உள்ளூர் இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரான பாகிஸ்தான் சுப்பர் லீக், பிரபலங்கள் உட்பட ஏராளமானோரின் பிரசன்னத்தோடு, நேற்று இரவு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அடுத்தாண்டு பெப்ரவரி 4ஆம் திகதி ஆரம்பித்து இப்போட்டிகள் இடம்பெறவுள்ளதுடன், இறுதிப் போட்டியானது பெப்ரவரி 24ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
முதலாவது தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெறவுள்ளது.
இத்தொடரின் வெற்றியாளர்கள், 10 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைப் பரிசுப் பணமாகப் பெறவுள்ளதோடு, பங்குபற்றும் ஒவ்வொரு வீரரும் 50,000 அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகையை ஊதியமாகப் பெறவுள்ளதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் நஜம் சேதி தெரிவித்தார்.
பாகிஸ்தான் வீரர்கள் தவிர, லசித் மலிங்க, அஞ்சலோ மத்தியூஸ், திஸர பெரேரா, கிறிஸ் கெயில், கெவின் பீற்றர்சன், கெரான் பொலார்ட், லூக் ரைட், கிரான்ட் எலியட், டுவைன் பிராவோ, ஷகிப் அல் ஹசன், சாமுவேல் பத்ரி, டிம் பிரெஸ்னன், டெரன் சமி, அன்ட்ரே ரசல், பிரட் ஹொட்ஜ் ஆகியோர் உட்பட பல சர்வதேச வீரர்களும் இத்தொடரில் பங்குபற்றச் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
முதலாவது தொடரானது, இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர், பேஷ்வர், குவேட்டா ஆகிய நான்கு நகரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகளைக் கொண்டிருக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
11 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago