Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 30 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து தேசிய கால்பந்தாட்ட அணியின் தலைவராக, இங்கிலாந்து அணியின் புதிய முகாமையாளர் சாம் அலடைஸின் கீழும் வெய்ன் ரூனி நீடிக்கிறார். இந்நிலையில், ரூனியைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது, இலகுவான முடிவு என அலடைஸ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி சார்பாக அதிக கோல்களைப் பெற்றுள்ள ரூனி, ஒரு வருடத்துக்கு முன்னர் ஸ்டீவன் ஜெரார்ட்டிடமிருந்து அணித்தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார்.
இந்நிலையில், கருத்துத் தெரிவித்துள்ள அலடைஸ், அவரது வீரர்களால், பெரியளவில் ரூனி மதிக்கப்படுவதாகவும் அணித்தலைவராக பொறுப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
எவ்வாறெனினும், யூரோ 2016 கிண்ணப் போட்டிகளின்போது, றோய் ஹொட்ஸ்டனின் முகாமைத்துவத்தின் கீழும், 30 வயதான ரூனியே அணித்தலைவராக இருந்தபோதும், இறுதிப் 16 அணிகளுக்கான சுற்றின்போது கத்துக்குட்டி அணியான ஐஸ்லாந்திடம் தோல்வியுற்று, தொடரிலிருந்து இங்கிலாந்து வெளியேறியிருந்தது.
எனினும், கருத்துத் தெரிவித்த அலடைஸ், இங்கிலாந்துக்கு ரூனி, சிறந்த அணித்தலைவர் என்றும், அணியின் சிரேஷ்ட வீரராக, அணியை வழிநடத்துவதற்கு சிறந்த தெரிவு என்று கூறினார்.
யூரோ 2016 போட்டிகளில் மத்தியகள வீரராகவே ரூனி களமிறக்கப்பட்ட நிலையில், இப்பருவகாலத்தில், மன்செஸ்டர் யுனைட்டெட்டில், ஜொஸ் மொரின்ஹோவால், முன் கள வீரருக்குப் பின்னால் ரூனி களமிறக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கருத்துத் தெரிவித்த அலடைஸ், மன்செஸ்டர் யுனைட்டெட்டில் ரூனியின் நிலை மாற்றமடைந்துள்ளது. ஆகவே, அங்கேயே ரூனியை விளையாட விரும்புகின்றேன் எனக் கூறியுள்ளதுடன், டெலே அல்லியும் சிறப்பாக விளையாட ஆரம்பித்துள்ளதாகவும், எனவே இது கடினமான தெரிவாக்கியுள்ளதாகவும் பொறுத்திருந்து பார்ப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் இடம்பெறவுள்ள 2018ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிகளுக்கான, தனது முதலாவது தகுதிகாண் போட்டியில், ஸ்லோவாக்கியாவுடன் இங்கிலாந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04) மோதவுள்ளது.
37 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago
4 hours ago