2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

பார்சிலோனாவுக்கு 4-0 கோல் வெற்றி

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 29 , மு.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

லா லிகா கால்பந்தாட்டப் போட்டிகளில், பார்சிலோனா அணிக்கும் றியல் சோனியடாட் அணிக்குமிடையிலான போட்டியில், பார்சிலோனா அணிக்கு 4-0 என்ற கோல் கணக்கிலான வெற்றி கிடைத்துள்ளது.

தனது காயத்திலிருந்து மீண்டு, பார்சிலோனா அணியின் கடந்த போட்டியில் பதில் வீரராகக் களமிறங்கிய லியனொல் மெஸ்ஸி, முதல் 11 வீரர்களுள் ஒருவராகக் களமிறங்கினார்.

இதற்கு முன்னைய போட்டியில், 4-0 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் அணியை வீழ்த்தியிருந்த நிலையில், அதிகளவிலான எதிர்பார்ப்புகளுடன் களமிறங்கியிருந்தது.

பார்சிலோனாவின் நம்பிக்கைக்குரிய வீரராக மாறியிருக்கும் நேமர், இப்போட்டியிலும் பார்சிலோனாவின் கோல் கணக்கை ஆரம்பித்து வைத்தார். 22ஆவது நிமிடத்தில் தனது கோலை, அவர் அடித்திருந்தார். தொடர்ந்து, மற்றொரு முக்கியமான வீரரான லூயிஸ் சுவரேஸ், 41ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலைப் பெற்று, முதற்பாதியை 2-0 என்ற கோல் கணக்கில் முடித்து வைத்தார்.

இரண்டாவது பாதியிலும், தொடர்ந்தும் ஆதிக்கத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா, 53ஆவது நிமிடத்தில் நேமர் பெற்றுக் கொடுத்த கோலின் உதவியுடன், 3-0 என்ற முன்னிலையைப் பெற்றது. தொடர்ந்து, போட்டியின் இறுதி நிமிடத்தில், லியனொல் மெஸ்ஸி பெற்ற கோலின் உதவியுடன் அவ்வணி, 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுக் கொண்டது.

இதனையடுத்து, 13 போட்டிகளுடன் பார்சிலோன அணி, 33 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் காணப்படுகிறது. அதே எண்ணிக்கையான போட்டிகளில் 29 புள்ளிகளுடன் அத்லெட்டிகோ மட்ரிட் இரண்டாமிடத்தையும், 12 போட்டிகளில் 24 புள்ளிகளுடன் றியல் மட்ரிட் அணி மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .