Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 07 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெம்ப்ளியில் இடம்பெற்ற சிநேகபூர்வ, சர்வதேச சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியொன்றில், ஸ்பெயின் லா லிகா சம்பியன்களான பார்சிலோனாவை 4-0 என்ற கோல்கணக்கில், இங்கிலாந்து பிறீமியர் லீக்கில் எட்டாவது இடம்பெற்ற லிவர்பூல் வென்றிருந்தது.
லிவர்பூல் அணியால் 34 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட சாடியோ மனே, இப்போட்டியின் 15ஆவது நிமிடத்தில், லிவர்பூலின் கோல்கணக்கை ஆரம்பித்து வைத்ததுடன், தொடர்ந்து, பார்சிலோனாவின் ஜேவியர் மஷரானோவால் ‘ஓவ்ண் கோல்’ முறையில் கோலொன்று பெறப்பட்டதுடன், போட்டியின் இரண்டாவது பாதியில், டிவோக் ஒரிஜி, மார்க்கோ குருஜிக் ஆகியோர் கோல்களைப் பெற, 4-0 என்ற கோல்கணக்கில் லிவர்பூல் இப்போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.
இடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இப்போட்டியில், இங்கிலாந்து அணியின் முன்கள வீரர் டேனியல் ஸ்டரிட்ஜ் இப்போட்டியில் பங்கேற்காததுடன், போட்டியின் முதற்பாதியுடன் காயம் காரணமாக ஜேம்ஸ் மில்னர் வெளியே சென்றிருந்தார்.
இப்போட்டியைப் பார்ப்பதற்கு 89,945 பேர் திரண்டிருந்த நிலையில், இந்த எண்ணிக்கையானது வெம்ப்ளியில் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது அதிகூடிய எண்ணிக்கையாகும்.
2014ஆம் ஆண்டு பார்சிலோனாவுக்குச் சென்ற பின்னர், முதற்தடவையாக, இப்போட்டியில், தனது பழைய கழகமான லிவர்பூலுக்கெதிராக லூயிஸ் சுவாரஸ் விளையாடியிருந்ததுடன், இப்போட்டியில் லியனல் மெஸ்ஸியும் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
12 minute ago
23 minute ago
31 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
31 minute ago
37 minute ago