2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

பாரிஸ் மாஸ்ட்டேர்ஸ் பட்டத்தை வென்றார் ஜோகோவிக்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 09 , மு.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரிஸில் இடம்பெற்ற மாஸ்ட்டேர்ஸ் இறுதிப்போட்டியில் தரவரிசையில் இரண்டாம் இடத்திலுள்ள பிரித்தானியாவின் அன்டி மறேயை, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்து தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சேர்பியாவின் நோவாக் ஜோகோவிச் பட்டத்தை கைப்பற்றினார்.

இந்த வருடம் இடம்பெற்ற நான்கு கிரான்ட்ஸ்லாம் போட்டிகளில், அவுஸ்திரேலிய பகிரங்க, விம்பிள்டன், அமெரிக்க பகிரங்க படங்களை கைப்பற்றிய ஜோகோவிச், இந்த வருடம் முடிவு வரை தரவரிசையில் முதலிடத்தில் இருப்பதை உறுதி செய்தார்.

போட்டியை 90 நிமிடங்களில் பூர்த்தி செய்த ஜோகோவிச், பாரிஸில் கைப்பற்றும் நான்காவது பட்டம் என்பதுடன், இவ்வருடத்தில் கைப்பற்றும் 10ஆவது பட்டம் இதுவாகும். அத்தோடு ஒரு வருடத்தில் ஆறு ஏ.டி.பி மாஸ்ட்டேர்ஸ் பட்டத்தை கைப்பற்றிய முதலாமவர் என்ற சாதனையையும் அவர் புரிந்தார்.

இப்போட்டியுடன் சேர்த்து, 22 போட்டிகளை தொடர்ச்சியாக வென்றுள்ள ஜோகோவிச், எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இலண்டனில் இடம்பெறவுள்ள உலக தொடர் இறுதிப்போட்டிகளை நம்பிக்கையுடன் எதிர்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .