Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அல்விரோ பீற்றர்சனுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளது. தென்னாபிரிக்காவின் 2015-16ஆம் ஆண்டு பருவகால உள்ளூர் இருபதுக்கு-20 தொடரில் இடம்பெற்ற போட்டி நிர்ணயம் தொடர்பாக, ஊழல் தடுப்பு விதிக்கோவையில், 13 மீறல்களை பீற்றர்சன் ஏற்றுக் கொண்டமையையடுத்தே பீற்றர்சனுக்கு மேற்படித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக அணுகப்பட்டமை குறித்த தகவல்களை வெளிப்படுத்தாமையில் நான்கு மீறல்கள், இன்னுமொருவர் ஊழல் தடுப்புக் கோவையை மீறுவதற்கான ஆதாரத்தை வெளிப்படுத்தாமையில் நான்கு மீறல்கள், துல்லியமான மற்றும் முழுமையான தகவல்களை வழங்காமை மூலம் விசாரணையாளர்களுக்கு ஒத்துழைக்க மறுத்தமையில் நான்கு மீறல்கள், விசாரணையுடன் தொடர்பான தகவல்களை மறைத்தமை மற்றும் அழித்தமையில் மீறல் போன்றவையே பீற்றர்சன் மேற்கொண்ட மீறல்கள் ஆகும்.
இதேவேளை, போட்டிகளை நிர்ணயித்தல் அல்லது நிர்ணயிப்பதற்கு முயலுதல் மற்றும் எந்தவொரு கையூட்டையும் பெறுதல் அல்லது வழங்குதல் போன்ற குற்றச்சாட்டுக்களை தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை மீளப் பெற்றிருந்தது. இந்நிலையில், தனது நடவடிக்கைகளுக்காக மன்னிப்புக் கோரியுள்ள பீற்றர்சன், போட்டிகளை நிர்ணயிக்கும் எந்த நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்த போட்டி நிர்ணய பிரச்சினையில் தடைக்குள்ளாகும் ஆறாவது வீரர் பீற்றர்சன் என்பதோடு மூன்றாவது சர்வதேச வீரராவார். குலாம் போடி, தமி தொஸ்லேகிலே, எதி மப்ஹலாட்டி, புமி மட்ஷிகிவே, ஜீன் சைம்ஸ் ஆகியோர் ஏழு ஆண்டுகளுலிருந்து 20 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதோடு விசாரணை தொடருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பீற்றர்சனின் தடை மூலம், எந்தவொரு சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் எந்தவிதத்திலும் பங்குபற்ற முடியாது என்பதுடன், தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை, சர்வதேச கிரிக்கெட் சபை அல்லது எந்தவொரு தேசிய சம்மேளனத்தினாலும் நடாத்தப்படும் கிரிக்கெட் போட்டிகளில் எந்தவொரு இயங்குநிலையையும் கொண்டிருக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், பீற்றர்சனின் குறிப்பான வகிபாகம் வெளிப்படுத்தப்படவில்லை என்பதுடன், தன்னை அணுகப்பட்டதை முழுமையாக வெளிப்படுத்தாததே பீற்றர்சனின் பாரிய மீறல் என்றவாறான கருத்துக்களை தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை வெளிப்படுத்தியிருந்தது.
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago