Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் இடைநிறுத்தப்பட்டுள்ள தலைவர் செப் பிளட்டரால், ஐரோப்பிய கால்பந்தாட்டச் சம்மேளனங்களின் சங்கத்தின் இடைநிறுத்தப்பட்ட தலைவர் மைக்கல் பிளட்டினிக்கு வழங்கப்பட்ட இரண்டு கொடுப்பனவுகளில் ஒரு கொடுப்பனவின் உத்தியோகபூர்வ ஆதாரம், இல்லாதிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
தனது ஆலோசகராகச் செயற்பட்டிருந்தமைக்காகவே பிளட்டினிக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதாக பிளட்டர் தெரிவித்த போதிலும், அவரது கருத்தில் உண்மையற்ற நிலைமை காணப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.
பிளட்டினிக்கான கொடுப்பனவாக 710,000 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்கள் முதலில் வழங்கப்பட்டாகவும், அதை வழங்குவதற்கான சரத்து, இருவருக்குமிடையிலான ஒப்பந்தத்தில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், 2011ஆம் ஆண்டு பெப்ரவரியில் பிளட்டினிக்கு 1.35 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ் வழங்கப்பட்டதாகவும், அவ்வாறான கொடுப்பனவொன்றுக்கான தேவை குறித்த ஆதாரமெதுவும் கிடையாது என, விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருவரும் 90 நாட்களுக்கு, பீபாவினால் இடைக்காலத் தடைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கெதிராக இருவருமே மேன்முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
47 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
4 hours ago
5 hours ago