Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத் (பீபா) தலைவர் செப் பிளட்டர், ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத் (யு.ஈ.எப்.ஏ) தலைவர் மைக்கல் பிளட்டினி இருவருக்கும், எட்டு வருடங்களுக்கு, கால்பந்தாட்டத்தில் பங்குபெறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பீபாவின் நற்பண்புச் செயற்குழுவால், இந்தத் தடை விதிக்கப்பட்டது.
பல்வேறுபட்ட ஊழல்கள் தொடர்பாக பீபா மீதும் அதன் தலைவர் மீதும் குற்றச்சாட்டுகள் காணப்படுகின்ற போதிலும், தனக்கு ஆலோசகராகப் பணிபுரிந்தார் என்பதற்காக, பிளட்டினிக்கு பிளட்டர், 2011ஆம் ஆண்டில் வழங்கிய 2.79 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் தொடர்பாகவே, இருவரும் இடைநிறுத்தம் செய்யப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த விசாரணைகளின் முடிவில், இவர்களிருவருக்கும் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை தவிர, பிளட்டருக்கு 50,000 சுவிஸ் பிராங்கும், பிளட்டினிக்கு 80,000 சுவிஸ் பிராங்கும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடைக்கெதிராகவும் அபராதத்துக்கெதிராகவும், இவர்களிருவரும் மேன்முறையீடு செய்வரென எதிர்பார்க்கப்படுகிறது.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago