2026 மே 16, சனிக்கிழமை

முதன் முறையாக இந்திய அணியில் சூரியவன்ஷி

Shanmugan Murugavel   / 2026 மே 16 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடருக்காக, இந்திய ஏ அணிக்கு முதன்முறையாக 15 வயதான வைபவ் சூரியவன்ஷி அழைக்கப்பட்டுள்ளார்.

திலக் வர்மா தலைமையிலான இக்குழாமில் ரியான் பராக் உப அணித்தலைவராக செயற்படவுள்ள நிலையில், இவர்கள் இருவரும்  அன்ஷுல் கம்போஜ் மாத்திரமே இந்திய அணியை இதுவரையில் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்கள்.

இக்குழாமில் பிரப்சிம்ரன் சிங், பிரியன்ஷ் ஆர்யா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

குழாம்: திலக் வர்மா (அணித்தலைவர்), பிரியன்ஷ் ஆர்யா, வைபவ் சூரியவன்ஷி, ரியான் பராக் (உப அணித்தலைவர்), ஆயுஷ் படோனி, நிஷாந்த் சிந்து, ஹர்ஷ் டுபே, சுர்யன்ஷ் ஷெட்ஜ்ஜே, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் காப்பாளர்), குமார் குஷாக்ரா (விக்கெட் காப்பாளர்), விப்ராஜ் நிகம், யஷ் தாக்கூர், யுட்வீர் சிங், அன்ஷுல் கம்போஜ், அர்ஷாட் கான்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .