Shanmugan Murugavel / 2017 ஜனவரி 01 , மு.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையில் இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் தொடரில், நேற்று (31) இடம்பெற்ற போட்டிகளில், லிவர்பூல், செல்சி, மன்செஸ்டர் யுனைட்டெட், லெய்செஸ்டர் சிற்றி ஆகிய அணிகள் வெற்றிபெற்றுள்ளன.
லிவர்பூல், 1-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றியைத் தோற்கடித்தது. அடம் லலானாவிடமிருந்து பந்தைப் பெற்ற ஜோர்ஜினியோ வெனாலும், போட்டியின் எட்டாவது நிமிடத்தில் தலையால் முட்டிப் பெற்ற கோலின் மூலமே, லிவர்பூல் வெற்றிபெற்றது. இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் 43 புள்ளிகளைப் பெற்றுள்ள லிவர்பூல், இரண்டாமிடத்திலுள்ளதுடன், மூன்றாமிடத்திலுள்ள மன்செஸ்டர் சிற்றியை விட நான்கு புள்ளிகள் அதிகமாகப் பெற்றுள்ளது.
செல்சி, 4-2 என்ற கோல் கணக்கில் ஸ்டோக் சிற்றியைத் தோற்கடித்தது. செல்சி சார்பாக, வில்லியன் இரண்டு கோல்களையும், கரி காஹில், டியகோ கொஸ்டா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம், இப்பருவகாலத்தில் தொடர்ச்சியாக 13 வெற்றிகளைப் பெற்றுள்ள செல்சி, பிறீமியர் லீக்கில் அதிக போட்டிகளைத் தொடர்ச்சியாக வென்ற ஆர்சனலின் சாதனையைச் சமப்படுத்தியுள்ளது. ஆர்சனல், 2000/01 பருவகாலத்தில், தொடர்ச்சியாக 13 போட்டிகளில் வென்றிருந்தது. பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் இரண்டாமிடத்திலுள்ள லிவர்பூலை விட ஆறு புள்ளிகள் அதிகமாக, 49 புள்ளிகளைப் பெற்று, முதலிடத்தில் செல்சி தொடர்கிறது.
மன்செஸ்டர் யுனைட்டெட், 2-1 என்ற கோல் கணக்கில் மிடில்ஸ்பேர்க் அணியைத் தோற்கடித்தது. மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாக, அந்தோனி மார்ஷியல், போல் பொக்பா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
லெய்செஸ்டர் சிற்றி, 1-0 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்டைத் தோற்கடித்தது. லெய்செஸ்டர் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலினை, இஸ்லாம் ஸ்லிமானி பெற்றிருந்தார்.
3 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago