Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 08 , பி.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மறு ஒளிபரப்பொன்றால் அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்டவீரரான மத்தியூ வேட் 30 ஓட்டங்களை மேலதிகமாகப் பெற்றார்.
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையே சிட்னியில் இன்று நடைபெற்ற மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியின்போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இப்போட்டியில் 50 (34) ஓட்டங்களை வேட் பெற்றிருந்தபோது, சின்னப்பாப்பம்பட்டி வீரர் தங்கராசு நடராஜனின் பந்துவீச்சில் பந்து வேட்டின் காலில் பட்டு எல்.பி.டபிள்யூ மூலமான ஆட்டமிழப்புக் கோரிக்கை முன்வைக்கப்படிருந்தது.
எனினும், நடுவர் ஆட்டமிழப்பை வழங்கவில்லை.
இந்நிலையில், தீர்ப்பை மறுபரிசீலனை செய்வதா என இந்தியா தமது 15 செக்கன்களுக்குள் ஆராய்ந்து கொண்டிருந்தபோதே மறு ஒளிபரப்பு காண்பிக்கப்பட்டதால் இந்தியா தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய முடியாமல் போனது.
பின்னர் மேலும் 19 பந்துகளை எதிர்கொண்டிருந்த வேட் இறுதியில் மேலும் 30 ஓட்டங்களைப் பெற்று 80 (53) ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
8 minute ago
20 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
32 minute ago