Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஏ.சி மிலனுடன் தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற சிநேகபூர்வ போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி வென்றது.
செல்சி சார்பாக லியம் டெலப் இரண்டு கோல்களைப் பெற்றதோடு, ஜோவா பெட்ரோ ஒரு கோலைப் பெற்றதோடு மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை யூசுஃப் பொபனா பெற்றிருந்தார்.
இதேவேளை ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 2-1 என்ற கோல் கணக்கில் இன்னொரு சீரி ஏ கழகமான ஜுவென்டஸ் வென்றது. ஜுவென்டஸ் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் அன்ட்றீயா கம்பியாஸோ பெற்றதோடு, டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை மக்ஸிமில்லியன் பெய்யர் பெற்றிருந்தார்.
25 minute ago
29 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
29 minute ago
1 hours ago