Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜனவரி 28 , பி.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்களின் டென்னிஸ் சங்கத்தால் இன்று வெளியிடப்பட்ட தரவரிசையில், அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் நடப்புச் சம்பியனான நயோமி ஒஸாகா முதலாமிடத்துக்கு முன்னேறினார்.
அவுஸ்திரேல்ய பகிரங்க டென்னிஸ் தொடருக்கு முன்பதாக நான்காமிடத்தில் காணப்பட்ட ஜப்பானின் ஒஸாகா, மூன்று இடங்கள் முன்னேறி முதலாமிடத்தை அடைந்துள்ளார்.
இதேவேளை, ஒஸாகாவிடம் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பெட்ரா குவிற்றோவா இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளார். இத்தொடருக்கு முன்பதாக ஆறாமிடத்தில் காணப்பட்ட செக் குடியரசின் குவிற்றோவா, நான்கு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தை அடைந்துள்ளார்.
இந்நிலையில், அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக முதலாமிடத்தில் காணப்பட்ட றோமானியாவின் சிமோனா ஹலெப், நான்காவது சுற்றுடன் வெளியேறிய நிலையில் இரண்டு இடங்கள் கீழிறங்கி மூன்றாமிடத்தில் காணப்படுகின்றார்.
இதேவேளை, அவுஸ்திரேலிய பகிரங்கத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக 16ஆம் இடத்தில் காணப்பட்டிருந்த 23 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றிருந்த செரீனா வில்லியம்ஸ், காலிறுதிப் போட்டி வரை முன்னேறிய நிலையில் ஐந்து இடங்கள் முன்னேறி 11ஆம் இடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 தரவரிசை வீராங்கனைகள் பின்வருமாறு,
இந்நிலையில், தொழில்முறை டென்னிஸ் வீரர்களின் சங்கத்தின் தரவரிசையும் இன்று வெளியிடப்பட்ட நிலையில், முதலாமிடத்தில் நொவக் ஜோக்கோவிச்சும் இரண்டாமிடத்தில் ரபேல் நடாலும் தொடருகின்றபோதும் அவுஸ்திரேலிய பகிரங்கத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக மூன்றாமிடத்திலிருந்த 20 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற றொஜர் பெடரர், ஆறாமிடத்துக்கு கீழிறங்கியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago