Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 29 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு இந்தியாவின் றோஹித் ஷர்மா முன்னேறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது, மூன்றாவது போட்டிகளில் 73, 121 ஓட்டங்களைப் பெற்ற நிலையிலேயே மூன்றாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி முதலாமிடத்தையடைந்துள்ளார்.
இங்கிலாந்துக்கெதிரான முதலாவது போட்டியில் 78 ஓட்டங்களைப் பெற்ற நியூசிலாந்தின் டரைல் மிற்செல், ஆறாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஐந்தாமிடத்தையடைந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது போட்டியில் 61 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் ஷ்ரேயாஸ் ஐயர், 10ஆம் இடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஒன்பதாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இங்கிலாந்துக்கெதிரான முதலாவது போட்டியில் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றிய நியூசிலாந்தின் மிற்செல் சான்ட்னெர், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஏழாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி நான்காமிடத்தையடைந்துள்ளார்.
இந்தியாவுக்கெதிரான மூன்றாவது போட்டியில் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் ஜொஷ் ஹேசில்வூட், 10ஆம் இடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
51 minute ago
9 hours ago
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
9 hours ago
17 Apr 2026
17 Apr 2026