Shanmugan Murugavel / 2024 நவம்பர் 13 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு பாகிஸ்தானின் ஷகீன் ஷா அஃப்ரிடி முன்னேறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கெதிரான இறுதி இரண்டு போட்டிகளிலும் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே நான்காமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி முதலாமிடத்தை ஷகீன் அடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில் பங்களாதேஷுக்கெதிரான மூன்று போட்டிகளில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆப்கானிஸ்தானின் ரஷீட் கான், சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் நான்காமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.
இதேவேளை இப்போட்டிகளில் 116 ஓட்டங்களைப் பெற்றதோடு, 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பங்களாதேஷின் மெஹிடி ஹஸன் மிராஸ் எட்டாமிடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி நான்காமிடத்தையடைந்துள்ளார்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களுக்கான தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில் நியூசிலாந்துக்கெதிரான இரண்டு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கையின் வனிது ஹசரங்க, பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் ஆறாமிடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தையடைந்துள்ளார்.
இதேவேளை இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது போட்டியில் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகளின் அகீல் ஹொஸைன், நான்காமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.
இதுதவிர தென்னாபிரிக்காவுக்கெதிரான முதலிரண்டு போட்டிகளிலும் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்தியாவின் ரவி பிஷ்னோய், எட்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஏழாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில் சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையிலும் ஆறாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஐந்தாமிடத்தை ஹசரங்க அடைந்துள்ளார்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது போட்டியில் 103 ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்தின் பில் ஸோல்ட், துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி இரண்டாமிடத்தையடைந்துள்ளார்.
இந்நிலையில் மேற்குறிப்பிட்ட தொடரின் இரண்டாவது போட்டியில் 83 ஓட்டங்களை பெற்ற இங்கிலாந்தின் ஜொஸ் பட்லர், ஏழாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஆறாமிடத்தையடைந்துள்ளார்.
இதுதவிர இதில் முதலாவது போட்டியில் 38 ஓட்டங்களைப் பெற்ற மேற்கிந்தியத் தீவுகளின் நிக்கலஸ் பூரான், 11ஆம் இடத்திலிருந்து ஓரிடம் முன்னெறி 10ஆம் இடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago