Shanmugan Murugavel / 2024 ஜூலை 09 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு இந்தியாவின் ஹர்திக் பாண்டியா முன்னேறியுள்ளார்.
இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் இங்கிலாந்துக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் 23 ஓட்டங்களைப் பெற்றதோடு தென்னாபிரிக்காவுக்கெதிரான இறுதிப் போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே மூன்றாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி முதலாமிடத்தை பாண்டியா அடைந்துள்ளார்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கெதிரான அரையிறுதிப் போட்டியிலும், இறுதிப் போட்டியிலும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய தென்னாபிரிக்காவின் அன்றிச் நொர்கியா, ஒன்பதாமிடத்திலிருந்து ஏழு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தையடைந்துள்ளார்.
இதேவேளை அரையிறுதிப் போட்டியில் 3 விக்கெட்டுகளையும், இறுதிப் போட்டியில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றிய இந்தியாவின் அக்ஸர் பட்டேல் எட்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஏழாமிடத்தையடைந்துள்ளார்.
தவிர, அரையிறுதிப் போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்தியாவின் குல்தீப் யாதவ், 11ஆம் இடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
13 minute ago
24 minute ago
32 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
32 minute ago
38 minute ago