2025 ஜூலை 31, வியாழக்கிழமை

முதலாவது டெஸ்டில் முன்னிலையில் பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 28 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் பாகிஸ்தான் காணப்படுகின்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் சட்டோகிராமில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், ஹஸன் அலியிடம் 5, ஷகீன் ஷா அப்ரியிடம் 2, பாஹீம் அஷ்ரப்பிடம் 2 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தபோதும், லிட்டன் தாஸின் 114, முஷ்பிக்கூர் ரஹீமின் 91, மெஹிடி ஹஸன் மிராஸின் ஆட்டமிழக்காத 38 ஓட்டங்களோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 330 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், அபிட் அலி 133, அப்துல்லாஹ் ஷஃபிக் 52, பாஹீம் அஷ்ரஃப்பின்  38 ஓட்டங்களைப் பெற்றபோதும், தஜியுல் இஸ்லாம் 7, எபொடொன் ஹொஸைன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 286 ஓட்டங்களைப் பெற்றது.

இந்நிலையில், தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ், ஷகீன் ஷா அஃப்ரிடி 3, ஹஸன் அலி ஒரு விக்கெட்டைக் கைப்பற்றிய நிலையில், இன்றைய மூன்றாம் நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 39 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .