Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஜூலை 10 , பி.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிம்பாப்வே, பாகிஸ்தான், அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலானதும் இங்கிலாந்து, இந்திய அணிகளுக்குமிடையிலானதுமான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடர்களைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில், அவுஸ்திரேலிய அணியின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவர் ஆரோன் பின்ஞ் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
முத்தரப்புத் தொடரின் ஐந்து போட்டிகளில் 306 ஓட்டங்களைப் பெற்றதையடுத்தே, நான்காமிடத்திலிருந்து முதலாமிடத்துக்கு முன்னேறியுள்ளார். இதேவேளை, குறித்த தொடரின் ஐந்து போட்டிகளில் 278 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தானின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பக்கர் ஸமன் 44 இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளார். இதுதவிர, இங்கிலாந்துக்கெதிரான தொடரில், மூன்று போட்டிகளில் 126 ஓட்டங்களைப் பெற்ற லோகேஷ் ராகுல் ஒன்பது இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago