Shanmugan Murugavel / 2022 ஜூன் 29 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், காலியில் இன்று ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியில் இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் திமுத் கருணாரத்ன, தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
இலங்கை சார்பாக டெஸ்ட் போட்டிகளில் ஜெஃப்ரி வன்டர்சே அறிமுகத்தை மேற்கொண்டுள்ளார்.
இரண்டு அணிகளின் விவரம் பின்வருமாறு,
இலங்கை: 1. பதும் நிஸங்க, 2. திமுத் கருணாரத்ன (அணித்தலைவர்), 3. குசல் மென்டிஸ், 4. அஞ்சலோ மத்தியூஸ், 5. தனஞ்சய டி சில்வா, 6. தினேஷ் சந்திமால், 7. நிரோஷன் டிக்வெல்ல (விக்கெட் காப்பாளர்), 8. ரமேஷ் மென்டிஸ், 9. ஜெஃப்ரி வன்டர்சே, 10. லசித் எம்புல்தெனிய, 11. அசித பெர்ணாண்டோ.
அவுஸ்திரேலியா: 1. டேவிட் வோர்னர், 2. உஸ்மான் கவாஜா, 3. மர்னுஸ் லபுஷைன், 4. ஸ்டீவ் ஸ்மித், 5. ட்ரெவிஸ் ஹெட், 6. கமரொன் கிறீன், 7. அலெக்ஸ் காரி (விக்கெட் காப்பாளர்), 8. பற் கமின்ஸ் (அணித்தலைவர்), 9. மிற்செல் ஸ்டார்க், 10. நேதன் லையன், 11. மிற்செல் ஸ்வப்ஸன்.
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago