Editorial / 2018 ஜூலை 02 , பி.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வே, பாகிஸ்தான், அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ஹராரேயில் இன்று இடம்பெற்ற பாகிஸ்தானுடனான போட்டியில் அவுஸ்திரேலியா இலகுவாக வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் பின்ஞ், பாகிஸ்தானை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில், ஷடாப் கான் 29 (25), ஆசிவ் அலி 22 (20), பாஹீம் அஷ்ரப் 21 (17) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், பில்லி ஸ்டான்லேக் 4, அன்றூ டை 3, ஜஹை றிச்சர்ட்ஸன், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 117 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுபெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 10.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்து 9 விக்கெட்டுகளால் 55 பந்துகள் மீதமிருக்க வெற்றிபெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில், ஆரோன் பின்ஞ் ஆட்டமிழக்காமல் 68 (33) ஓட்டங்களைப் பெற்றார்.
இப்போட்டியின் நாயகனாக பில்லி ஸ்டான்லேக் தெரிவானார்.
14 minute ago
25 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
33 minute ago